புதுக்கோட்டை:புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 7 மாவட்ட மக்களின் நூறாண்டு கனவுவான காவேரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விராலிமலை குன்னத்தூரில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக சுமார் ரூ.7600 ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இதை 100 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆறு வெட்டும் பணிகளை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி துவக்கி வைத்தார். பின்னர் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம்: பணி எப்போது முடியும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் விஜயபாஸ்கர் சட்டப்பேரவை கூட்டுத்தொடரில் அடிப்படை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன்பின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காவிரி, குண்டாறு, வைகை இணைப்பு திட்ட பணிகள் நடைபெறும் குன்னத்தூர் பகுதிக்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: நாட்டிலேயே வரி வசூல் குறைந்த மாநிலம் தமிழகம்: அமைச்சர் கே.என்.நேரு