தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலன் பிரிவால் மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை! - hiding girl's suicide Relatives arrest

புதுக்கோட்டை: ஏழு ஆண்டுகளாக காதலித்தவரை பிரிந்ததால் மனமுடைந்த 17 வயது சிறுமி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காதலனின் பிரிவு தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்த சிறுமி!
காதலனின் பிரிவு தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்த சிறுமி!

By

Published : Jun 14, 2020, 8:16 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காதலனை பிரிந்த சிறுமி, மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனை மறைத்து அச்சிறுமியின் உடலை அடக்கம் செய்த 6 பேர் மீது ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

தோப்புக்கொல்லையைச் சேர்ந்த விவேக், இடையன்வயலைச் சேர்ந்த சாவித்திரி என்ற 17 வயது சிறுமி இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சாவித்திரி தனக்கு வேறு இடத்தில் மணமுடிக்க போவதாக விவேக்கிற்கு தொலைபேசி வாயிலாக தகவல் அளித்தார்.

அதையடுத்து, ஜூன் 7ஆம் தேதி இருவரும் வீட்டிலிருந்து தலைமறைவாகி கோயம்புத்தூருக்கு பேருந்தில் சென்றனர். குளித்தலை காவல்துறையினர் செய்த திடீர் சோதனையில் இந்த விவகாரம் அம்பலமானது.

அதன்பின், இருவரையும் காவல்துறையினர் காவல் நிலையத்தில் தங்க வைத்தனர். இது குறித்து சாவித்திரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற சாவித்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாவித்திரியை சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.

அப்போது சாவித்திரிக்கு 18 வயது ஆவதற்கு இன்னும் நான்கு மாதகாலம் உள்ளதாகவும், 18 வயது பூர்த்தியானவுடன் திருமணம் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனிடையே, கடந்த 11ஆம் தேதி தோப்புக்கொல்லையில் இருந்த விவேக்கை 3 பேர் கொண்ட கும்பல் கார் மூலம் கடத்திச் சென்று தாக்கினர். இதைத் தொடர்ந்து அன்றிரவு தனது காதலனைச் சந்திக்கச் செல்ல முடியாததால் சாவித்திரி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

காதல் விவகாரத்தில் வன்முறையை கலக்கவிட்ட சாவித்திரியின் குடும்பத்தினர், சாவித்திரியின் தற்கொலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். இந்நிலையில், தனது காதலியை குடும்பத்தாரே கொலை செய்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆலங்குடி காவல்துறையினரிடம் விவேக் புகாரளித்தார்.

இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆலங்குடி காவல்துறையினர் சாவித்திரி தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்டு இறந்ததை மறைத்து உடலை எரித்த சாவித்திரியின் உறவினர்கள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞரால் கொலை செய்யப்பட்ட காளை - மருத்துவக் குழு உடற்கூறாய்வு

ABOUT THE AUTHOR

...view details