புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து போடப்படும் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள நான் தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர் - pudukottai district news
புதுக்கோட்டை: கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள நான் தயார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாளை (ஜன.16) திட்டமிட்டப்படி கரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணி தொடங்குகிறது. 166 மையங்களில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பிரபல மருத்துவர்கள் மருத்துவத் துறை உயரதிகாரிகள் ஆகியோர் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள உள்ளனர். ஏற்கனவே கரோனாவால் குணமடைந்து 15 தினங்கள் ஆன முன்களப்பணியாளர்கள் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளலாம். முதற்கட்டமாக 6 லட்சம் சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது. பொது மக்களுக்கு பயம் இருந்தால் நான் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள தயார்" என்றார்.
இதையும் படிங்க:மனதில் சாணக்கியன் என நினைத்து செயல்படுபவர் குருமூர்த்தி- ஜெயக்குமார்