தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் தலையில் துண்டைப் போட்டுதான் போகணும்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் தலையில் துண்டைப் போர்த்திக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

By

Published : Mar 26, 2019, 4:58 PM IST

இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் கூட்டணி வேட்பாளர்கள் இளங்கோவன் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சிகளை போல அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசுவது அல்ல; எப்பொழுதும் ஒரே மாதிரியான அரசியலை அதிமுக முன்னெடுத்துச் செல்கிறது.

நமது நாட்டிற்கு மோடி ஆட்சிதான் சிறப்பான ஆட்சியாக அமையும். மக்கள் இந்த தேர்தலை கிரிக்கெட் விளையாடுவதை போல பாவித்து எங்களை பவுண்டரி, சிக்சர், செஞ்சுரி என அடிக்கவைத்து வேட்பாளர்களை தூக்கிவிட வேண்டும்.

இந்த நாட்டில் காலரை தூக்கிவிட்டு கெத்தாகச் செல்ல வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால் தலையில் துண்டைப் போர்த்திக் கொண்டு போக வேண்டியதுதான்.

வைகோ மேடையில் நின்று கொண்டு யாரை முதலமைச்சராக கை காட்டலாம்... யார் பிரதமராக வருவார்கள் என சின்னப்பிள்ளை போல சைகை காட்டி வருவது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் நிலையான கட்சிகள் அல்ல; அவர்கள் ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் காவிரி நீரை நம்பி இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் காவிரி மற்றும் கொண்ட ஆறு இணைப்புத் திட்டம் இரண்டு ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details