புதுக்கோட்டை:தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர், அமைச்சர்கள், அலுவலர்கள் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையடுத்து மழை வெள்ளப் பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.