தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எழுவர் விடுதலை... நீட் தேர்வு - சட்டப்போராட்டம் தொடரும் என அமைச்சர் உறுதி

எழுவர் விடுதலை மற்றும் நீட் தேர்வில் இருந்து விலக்கு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டத்தைத் தொடரும் என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

By

Published : Sep 17, 2021, 6:26 AM IST

புதுக்கோட்டை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஆயிரத்து 933 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை முழுமையாக செலுத்தியுள்ள 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகளை தேர்வு செய்யும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "இந்த குடியிருப்பு பகுதிகளின் கட்டுமான பணி முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால், இதன் தரம் குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. தரம் நன்றாக இருந்தால் மட்டுமே பயனாளிகளிடம் வீடு ஒப்படைக்கப்படும். கட்டுமான பணியின் தரம் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால், ஒப்பந்தகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Also read:’டிஜிட்டல் ஊடக கண்காணிப்பு புதிய விதிக்கு இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் உத்தரவு

எழுவர் விடுதலை மற்றும் நீட் தேர்வு ரத்து தொடர்பாகவும் தமிழ்நாடு அரசின் சட்ட போராட்டம் தொடரும். சட்டப்போராட்டம் என்பது நீண்டகால தீர்வு. குறுகிய காலத்தில் இதில் தீர்வு காண முடியாது. இறுதியில் நியாயம் கிடைக்கும்; நியாயம் வெல்லும்.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்துள்ள அகதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் விடுதலை தொடர்பாக மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. சிறை துறைக்கும், சிறப்பு முகாமிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

அமைச்சர் ரகுபதி பேட்டி

இவர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது. அவர்களின் விடுதலை நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது. மேலும் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக நீதிமன்றமும், மத்திய அரசும்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details