தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை... இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை! - sexual assault case in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சிறுமியை துன்புறுத்தி பாலியல் வன்புணர்வு (sexually assaulting minor) செய்த இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

man sentenced to life imprisonment
man sentenced to life imprisonment

By

Published : Nov 15, 2021, 5:01 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு மாதவன் என்பவர் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை துன்புறுத்தி பாலியல் வன்புணர்வு (sexual assault) செய்துள்ளார். இதனடிப்படையில், மாதவன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் (Pudukkottai Mahila Court ) நடைபெற்றுவந்தது.

இந்தநிலையில் இன்று(நவ.15) நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை விதித்துள்ளது. அதில், குற்றவாளி மாதவனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் நான்கு மாதங்களிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாணவியின் இறுதி ஊர்வலம் - கண்ணீர்விட்ட கோவை மக்கள்

ABOUT THE AUTHOR

...view details