தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

50 வாரிசுகள்... 107ஆவது பிறந்தநாள்... கேக் வெட்டி கொண்டாடிய கருப்பையா தாத்தா! - 107 birthday celebration

வாரிசுகளுடன் முதியவர் ஒருவர் தனது 107ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் புதுக்கோட்டையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர்
முதியவர்

By

Published : Jul 14, 2020, 7:59 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே பெருமருதூர் கிராமத்தில் வசிக்கும் கருப்பையா தாத்தாவுக்கு இன்றோடு (ஜூலை 14) 107 வயதாகிறது. இவரது 107ஆவது பிறந்தநாள், இவருடைய வாரிசுகள் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தற்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா தொற்றால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் வசிக்கும் முதியவர்கள் திக்குமுக்காடிவருகிறார்கள்.

ஆனால், புதுக்கோட்டையில் வசிக்கும் கருப்பையா தாத்தா மனோதிடத்துடன் தனது சிறிய வீட்டில் வசித்துவருகிறார். இவருடைய உறவினர்கள் அனைவரும் இந்தக் கிராமத்தில்தான் கடந்த மூன்று மாதங்களாகத் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கருப்பையா தாத்தா தற்பொழுது நல்ல உடல் ஆரோக்கியத்தோடு உள்ளார்.

இதுகுறித்து உறவினர்கள் பேசுகையில், ”தன்னுடைய இளமைக் காலங்களில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டதால், அவரின் உடல் வலிமையாக உள்ளது. இதுவரை அவருக்கு எவ்வித வியாதியும் வந்ததில்லை. இந்த வயதிலும் நடந்துதான் எங்கேனும் செல்வார். இன்னும் நீண்ட காலம் அவர் இதேபோல் வாழ வேண்டும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கடினமான யோகா செய்து அசத்திவரும் முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details