தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை! - 108 ஆம்புலன்ஸ்

புதுக்கோட்டை: இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்று 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

By

Published : Aug 20, 2020, 9:06 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள சா.குறிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்திக்கு (30) இன்று (ஆக. 20) காலை பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து சண்முகம் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் வந்த 108 ஆம்புலன்ஸ், சாந்தியை ஏற்றிக்கொண்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

ஆம்புலன்ஸ் இலுப்பூரையடுத்த சாங்கராப்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாந்திக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் துடிதுடித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ஆம்புலன்ஸிலேயே மருத்துவ உதவியாளர் பூபதி ராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். அப்போது சாந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதன் பின்னர் தாயும், குழந்தையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பைலட் தேவபாஸ்கரன் கூறியபோது, "பிரசவ சிகிச்சை மிகவும் சிக்கலானது. அதிக வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்க நேரிடுகிறது. இலுப்பூர் ஆம்புலன்ஸில் மட்டும் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மூன்று பேருக்கு பிரசவ சிகிச்சை அளித்து தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றி உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details