தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்மாய் மடைகளில் கசியும் நீர்... சரி செய்யக்கோரி சிறுவன் வெளியிட்ட வீடியோ - பொதுமக்கள் கோரிக்கை

நெறிகிப்பட்டி கிராமத்தில் பெய்த கனமழையால் மூன்று மடைகளிலும் கட்டுப்படுத்த முடியாத அளவு தண்ணீர் வெளியாகிறது. மடையில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமத்து சிறுவன் கோரிக்கை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கண்மாய் மடைகளில் கசியும் நீர்
கண்மாய் மடைகளில் கசியும் நீர்

By

Published : Nov 15, 2022, 10:43 PM IST

புதுக்கோட்டை:அன்னவாசல் ஒன்றியம் புல்வயல் ஊராட்சியில் உள்ள கிராமம், நெறிகிப்பட்டி. சில நாட்களாக மழை பெய்து கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் வேதனையின் உச்சத்திற்கே செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கு இருக்கக்கூடிய தெக்கிமடை, நடுமடை, வடக்கி மடை என்று சொல்லக்கூடிய மூன்று மடைகளிலும் கட்டுப்படுத்த முடியாத அளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மடையில் இருந்து தண்ணீர் கசிவு எங்கு வெளியாகிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மழை பெய்த தண்ணீர் விவசாயத்திற்குப் பயன்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் புல்வயல் ஊராட்சியில் உள்ள நெறிகிப்பட்டி கண்மாயை பார்வையிட்டு மடையில் ஏற்பட்டுள்ள கசிவை விரைவில் சீர் செய்து தண்ணீரை தேக்கி விவசாயத்தைக் காக்க வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்மாய் மடைகளில் கசியும் நீர்

இதுகுறித்து அந்த கிராமத்து சிறுவன் ஆதவன் அரசுக்கு கோரிக்கை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சுரங்கப்பாதை நீரை வெளியேற்ற கோரிக்கை - நெடுஞ்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்...

ABOUT THE AUTHOR

...view details