புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி சார்பில் காந்தி பூங்கா அருகே 2 கோடி ரூபாய் மதிப்பில் அறிவுசார் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் நடந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக முதலமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநரைச் சந்தித்த பின்னர் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
அமைச்சரை பதவி நீக்கவோ, பதவியில் இருந்து எடுக்கவோ முதலமைச்சருக்குதான் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, ஏற்கனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது, எனவே இது வரவேற்கத்தக்கது என்றார்.
மேலும் பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சி காலகட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிர்கட்சி எம்எல்ஏக்கள் மனு அளித்தால், அதனை விஜயபாஸ்கர் திட்டமிட்டே அந்தப் பகுதிகளுக்கு அனுமதி மறுத்து வந்தார். அவர் தற்போது அரசியல் இன்றி அனைத்து பகுதிகளுக்கும் சமமாக அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். தற்போதைய ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையாக பாரபட்சம் இன்றி நடத்தப்படுகிறது.