புதுக்கோட்டை மற்றும் விராலிமலை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கார்த்திக் தொண்டைமான் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு ஆதரவாக, அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ”வெண்ணையில் இருந்து வந்தால் நெய். ஸ்டாலின் வாயிலிருந்து வந்தால் அது பொய். திமுக என்றால் திராணி இல்லாதவர்கள் முன்னேற்றக் கழகம். எனவே, அக்கட்சியை நம்பாதீர்கள். கருணாநிதியே ஸ்டாலினை நம்பாமல் தான் முதலமைச்சர் நாற்காலியை அவருக்கு வழங்கவில்லை.
’கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை’ - அதிமுக
புதுக்கோட்டை: வெற்றி நடைபோடும் தமிழகம், வீரநடை போடும் தமிழகமாக மாற மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா கூறியுள்ளார்.
vindhya
திமுக ஆட்சியில் இருந்தபோது எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தன. அதையெல்லாம் அதிமுக அரசுதான் தீர்த்து வைத்தது. அவர்களால்தான், கச்சத்தீவு பிரச்சனை, காவேரி பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை ஆகியன வந்தது. எனவே, வெற்றி நடைபோடும் தமிழகம் வீர நடை போடும் தமிழகமாக மாற, மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி, எப்படி வாக்களிப்பது மச்சான்ஸ் - நடிகை நமீதா