தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ரஜினியை இயக்கும் சங்பரிவார் அமைப்புகள்?’ - கார்த்தி சிதம்பரம் சந்தேகம் - Karti Chidambaram news

புதுக்கோட்டை: ரஜினியின் நடவடிக்கைகளைப் பார்த்தால் சங்பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் அவரை இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என்று சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மக்களவை உறுப்பினர்  கார்த்தி சிதம்பரம்  Karti Chidambaram  புதுக்கோட்டை மாவட்டச் செய்திகள்  தமிழ்நாடு காங்கிரஸ்  ரஜினி அரசியல்  rajini politics  Karti Chidambaram news  tamilnadu congrees
கார்த்தி சிதம்பரம்

By

Published : Jan 28, 2020, 8:25 AM IST

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்ளும்போது சில பல மனஸ்தாபங்கள் வருவது இயல்புதான். இருப்பினும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி வாக்களித்திருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலுக்கு கட்சித் தாவல் தடைச் சட்டம் இருப்பது போல் உள்ளாட்சித் தேர்தலுக்கும் கட்சித்தாவல் தடைச்சட்டம் கொண்டு வந்தால்தான் நல்லது.

ரஜின் அரசியலுக்கு வருவது அவருடைய ஜனநாயக உரிமை. அதை யாரும் மறுக்கவில்லை. இருப்பினும் நாட்டிலுள்ள நடைமுறைப் பிரச்னைகளை பற்றி கருத்துச் சொல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து சர்ச்சையை ஏற்படுத்துவது சரியல்ல.

கார்த்தி சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் செயல்படுவதைப் பார்த்தால், இந்து, இந்துஸ்தான் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள்தான் அவரை இயக்குகிறார்கள் என்று தோன்றுகிறது. காவிரி குண்டாறு திட்டத்திற்காக மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

காவிரி குண்டாறு திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை - கார்த்தி சிதம்பரம்

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். அதை உடனடியாக தடுத்து நிறுத்துவதுதான் நல்லது’ என்றார்.

இதையும் படிங்க: தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்

ABOUT THE AUTHOR

...view details