புதுக்கோட்டை: கறம்பக்குடியிலுள்ள நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நரிக்குறவர் காலனியிலுள்ள குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் புதிய வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 32 வீடுகள் கட்ட பணியாணை ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு விட்டது.
கட்டுமான பணிகளுக்கு உபகரணங்கள் அனைத்தும் தயாராக இருக்கும் நிலையில், மணல் தட்டுப்பாடு இருப்பதாகவும், வீடு கட்டுவதற்கு சவுது மணல் ஆற்றில் அள்ளிக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.