தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜேசிபி - கார் மோதிக்கொண்ட விபத்தில் காவலர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: அம்மாசத்திரம் அருகே ஜேசிபி வாகனமும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் உயிரிழந்தார்.

JCB - Guard dies in car crash accident
JCB - Guard dies in car crash accident

By

Published : May 29, 2020, 8:21 PM IST

திருச்சி மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் மனோ. இவர் இன்று தனது நண்பரின் மனைவி மற்றும் குழந்தையுடன் புதுக்கோட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் அம்மாசத்திரம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஜேசிபியின் மீது மோதி விபத்துகுள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த காவலர் மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் அவருடன் காரில் சென்ற பெண் மற்றும் குழந்தை இருவரும் படுகாயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் அறிந்து வந்த கீரனூர் காவல் துறையினர் இறந்தவரின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த கும்பல் கைது!

ABOUT THE AUTHOR

...view details