6ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்வதன் மூலம் மன அமைதி உடல்நலம் கிடைப்பதாக உலகளவில் நம்பப்படுகிறது. பிரதமர் மோடி அனைவரும் யோகா செய்ய வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார். மன அழுத்தத்தை குறைத்தல், ரத்த அழுத்தத்தை சீராக்குதல், கொழுப்புகளை குறைத்தல் போன்ற வேலைகளை யோகா செய்கிறது. அந்த வகையில், யோகா உடல் அளவிலும் மட்டுமல்ல மனதளவிலும் திருப்தியை தருகிறது.
சர்வதேச யோகா தினம்: யோகா பயிற்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் - pudukkottai district news
புதுக்கோட்டை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
yoga
இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதனை கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தொடங்கி வைத்து யோகா பயிற்சி செய்தார்.
இதையும் படிங்க:கரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு