தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்களிக்க விருப்பமில்லை... தேர்தல் அதிகாரியை தெறிக்கவிட்ட இளைஞர்!

புதுக்கோட்டை: அரசியல் கட்சிகள் தான் வசிக்கும் பகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாகக்கூறி, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனக்கு வாக்களிக்கப் பிடிக்கவில்லை என 17ஏ படிவத்தை பூர்த்தி செய்துள்ளார்.

சண்முகநாதன்

By

Published : Apr 19, 2019, 10:08 AM IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நம்மகோட்டையைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று வாக்களிக்க சென்றிருந்தார். அப்போது, அங்கு பணியிலிருந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம் தனக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்றும், அதற்குரிய படிவத்தைத் தாருங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

சண்முகநாதனின் கோரிக்கை ஏற்ற அலுவலர்கள், அதற்குரிய படிவத்தைக் கொடுத்து அவரின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டனர்.

வாக்காளர் சண்முகநாதன்

இதுகுறித்து நம் ஈடிவி பாரத்துக்கு சண்முகநாதன் அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, இந்தப் பகுதியில் தேர்தலை முன்னிட்டு கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு மனசாட்சிக்கு விரோதமாக பொதுமக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் நான் வாக்களிக்கப் போவதில்லை என முடிவெடுத்தேன் அதற்கான படிவத்தை வாக்குச் சாவடியில் வாங்கி பூர்த்தி செய்தேன்.

மேலும், இதுகுறித்து தேர்தல் நிலை அலுவலரிடம் தகவல் அளித்தேன். அதற்கு அந்த அலுவலர் தனக்கு அதுபோன்று எந்த ஒரு தகவலும் வரவில்லை என்றும், இதுகுறித்து உயர் அலுவலர்களிடம் கேட்பேன் எனக் கூறியிருந்தார். பின்னர், அவருக்கு வந்திருந்த கையேட்டின் படி,17ஏ படிவத்தின் கீழ் வாக்களிக்க மறுத்தாக அந்த அலுவலர் என்னிடம் தெரிவித்தார்.

நான் வசிக்கும் பகுதியில் ஜனநாயகம் இல்லாத நான் வாக்களிக்கவில்லை. பணநாயகத்திற்கு நான் விலைபோக விரும்பவில்லை, எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details