புதுக்கோட்டை:முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர், சி.விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர் மற்றும் இவரது மனைவி ரம்யா மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஒரு சில நகல்கள் விடுபட்டுள்ளதாக, விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, விடுபட்ட நகல்களை ஒப்படைக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 2ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா கேட்ட 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையின் நகல்களை இருவரிடமும் மீண்டும் ஒப்படைக்க, சம்மதம் தெரிவித்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் மாசு கட்டுப்பாட்டு துறையை தவிர வேறு எதிலும் குறைகள் இல்லை - உறுதிமொழிக் குழு தகவல்!
அப்போது விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், அவர்களுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் வழங்கிய 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள், விஜயபாஸ்கர் வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய் ஆனந்த், இந்த வழக்கு விசாரணையை கடந்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த், இந்த வழக்கு விசாரணையை கடந்த ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நீதிபதி உத்தரவின் பேரில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 6ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதி வழக்கை இன்று (ஜன.11) ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், வழக்கை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அரூர் அருகே இளைஞர்கள் உடன் வாக்குவாதம்.. அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!