புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் 60க்கும் மேற்ப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 50 பேர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா நோயாளிகள் தங்கியிருக்கும் பகுதியில் சுகாதாரமற்று காணப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அத்தோடு கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்று இருப்பதாகவும், அதனால் அவர்களுக்கு வீடுகளிலிருந்து உணவு எடுத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு உடைகள், வார்டின் முன்பே கழற்றி போடப்படுவதால் மற்றவர்களுக்கும் தொற்றுப் பரவும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.