தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுத்தெருவில் விட்ட மகன் - ஆட்சியரின் உதவியோடு சொத்துகளை மீட்ட மூதாட்டி - புதுக்கோட்டை மாவட்டச் செய்திகள்

புதுக்கோட்டை: சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு நடுத்தெருவில் விட்ட மகனிடமிருந்து காளியம்மாள் (76) என்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியரின் உதவியோடு சொத்துகளை மீட்டுள்ளார்.

-pudhukottai-
-pudhukottai-

By

Published : Feb 17, 2020, 6:10 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள் (76) என்பவர், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மனுவில், "எனது மகன் தியாகராஜனுக்கு எனது சொத்துகளை எழுதிக்கொடுத்தேன். அதைவாங்கிக்கொண்ட அவர், என்னை முறையாகக் கவனித்துக்கொள்ளவில்லை. என்னை கவனிக்க யாருமில்லை. எனவே நான் அவர் பெயரில் எழுதிக்கொடுத்த தான செட்டில்மென்டை ரத்து செய்து, ரூ.3 கோடி மதிப்பிலான சொத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்" என்று கூறியிருந்தார்.

காளியம்மாளின் வழக்கறிஞர்

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி வருவாய் கோட்டாட்சியருக்கு அளித்த உத்தரவின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு 42 நாட்களில் முதியோர் பராமரிப்பு சட்டம் 2007ன் படி ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை மீண்டும் காளியம்மாளுக்கு மாற்றி வழங்கப்பட்டது. அதனால் காளியம்மாள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் தனக்கு வழிகாட்டிய வழக்கறிஞருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க:சொத்துத் தகராறில் மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை

ABOUT THE AUTHOR

...view details