தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருவேறு விபத்துகளில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை: இருவேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

four-killed-in-two-separate-accidents-near-pudukkottai
four-killed-in-two-separate-accidents-near-pudukkottai

By

Published : Sep 4, 2020, 6:53 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள முருகக்கோன்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (29) . இவருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் பாப்பாங்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மின்வாரிய ஊழியர் அஜய்கோஸ்(48) என்பவர் மீது மோதியுள்ளார்.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியிலிருந்து திருமண பந்தல் பொருள்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம், புதுக்கோட்டை விராலிமலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து, சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வாகனத்தின் மேல் அமர்ந்தவாரு பயணம் செய்து வந்த விரலூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (60) மற்றும் விராலிமலை பகுதியைச் சேர்ந்த முருகன்(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவேறு விபத்துகளில் புதுமாப்பிள்ளை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கஞ்சா ஆசாமிகளுக்குள் தகராறு - ஒருவருக்கு கத்திக் குத்து!

ABOUT THE AUTHOR

...view details