தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறைக்குத் தெரியாமல் இளைஞரின் உடல் எரிப்பு: ஐந்து பேர் கைது! - இளைஞரின் உடல் எரிப்பு

புதுக்கோட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞரின் உடலை காவல் துறையினருக்குத் தெரியாமல் எரித்த ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இளைஞரின் உடல் எரித்த ஐந்து பேர் கைது
இளைஞரின் உடல் எரித்த ஐந்து பேர் கைது

By

Published : Sep 23, 2020, 5:06 PM IST

புதுக்கோட்டை: திருமயம் அருகேவுள்ள தல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கூலித்தொழிலாளி மணியரசன் (37). இவர் கடந்த சில மாதங்களாக வேலை கிடைக்காத விரக்தியில் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில், மணியரசன் சில தினங்களுக்கு முன்பு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அவரது உடலை அவசர அவசரமாக அவரது உறவினர்கள் ஐந்து பேர் எரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த கும்மங்குடி கிராம நிர்வாக அலுவலர் காளிதாசன், கே. புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் பாரதி, மணியரசனின் உறவினர்களாக செல்வராஜ், காந்தி, ராஜேந்திரன், வேலு, பெரிய கருப்பன் ஆகியோரை கைதுசெய்தார்.

இதையும் படிங்க: காவல் துறையினருக்கு தெரியாமல் பெண் உடல் எரிப்பு - 5 பேர் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details