புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து ஆரோக்கியராஜ், முருகன் ஆகிய இருவருக்கும் சொந்தமான விசைப்படகில் அவர்கள் உள்பட ராஜ்குமார், மோகன், நாகராஜ், மைக்கில், தினேஷ், சாரதி, அரவிந்த், சிவகுமார் உள்ளிட்ட பத்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, அவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அதன்பின், மருத்துவ பரிசோதனை செய்து மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.