தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னுரிமை - அமைச்சர் பன்னீர்செல்வம் - தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னுரிமை

விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டம் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னுரிமை அளித்து அதற்குரிய திட்டமும் அறிவிக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னுரிமை - அமைச்சர் பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னுரிமை - அமைச்சர் பன்னீர்செல்வம்

By

Published : Jul 14, 2021, 9:14 PM IST

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 14) புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான்மலை ஸ்டாமின் (மாநில வேளாண் விரிவாக்க மேலாண்மை நிலையம்), வேளாண்மைக் கல்லூரி மற்றும் தோட்டக்கலைப் பண்ணையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் திருமதி.கவிதா ராமு, தோட்டக்கலைத்துறை இயக்குநர் டாக்டர்.ஆர்.பிருந்தாதேவி ஆகியோர் உடனிருந்தார்கள்.

பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை ஸ்டாமின், வேளாண்மைக் கல்லூரி மற்றும் தோட்டக்கலைப் பண்ணை உள்ளிட்டவைகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளார். மேலும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் விவசாயிகளிடம் தேவைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டம் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்த முன்னுரிமை அளித்து அதற்குரிய திட்டமும் அறிவிக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். விவசாயிகள் நலன் காக்கும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு செயல்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:அமித்ஷா பெரிய சங்கி; அண்ணாமலை சின்ன சங்கி!

ABOUT THE AUTHOR

...view details