புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலிமலை, ஆலங்குடி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட், விவிபேட், மை உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை அனுப்பும் இறுதிக்கட்ட பணிகள் இன்று (ஏப்ரல் 5) தொடங்கியது.
புதுக்கோட்டையில் தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் இறுதிக்கட்ட பணி தொடக்கம்! - புதுக்கோட்டை அண்மைச் செய்திகள்
புதுக்கோட்டை: ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை அனுப்பும் இறுதிக்கட்ட பணிகள் இன்று (ஏப்ரல் 5) தொடங்கியன.
தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள்
மேலும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பொருள்களான கிருமிநாசினி, கையுறைகள், மாஸ்க்குகள் உள்ளிட்டவைகளும் உடன் அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள், துணை ராணுவப் படையினரும் வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க :சசிகலா பெயரை சேர்க்காவிடில் தேர்தலை ஒத்திவையுங்கள்- அமமுக ஆவேசம்