புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை தெற்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன்(58) அவரது மகன் முருகானந்தம்(28). இவர்கள், பாரதி தாசன் சாலையில் தமிழ் பிளக்ஸ் என்ற பெயரில் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், முருகானந்தத்திற்கும் ஆலங்குடியைச் சேர்ந்த ஜபருல்லா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டதில், ஜபருல்லா காயமடைந்தார்.
இதையடுத்து, முருகானந்தம் அவரது தந்தை கணேசன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, அவர்களுக்கு சொந்தமான பிளக்ஸ் அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது, ஜபாருல்லா மகன் முஸ்தபா என்பவரின் தலைமையில் ஆறு பேர் கொண்ட கும்பல், இருவரையும் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினர். இதில், படுகாயமடைந்த இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.