தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 23, 2023, 10:57 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகள் மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை கொளுணி கண்மாய் மீன்பிடி திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details