தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பேரிடர் காலங்களில் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைக் காப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் வசம் உள்ள பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் பைபர் படகுகள், பாதுகாப்பு உபகரணங்கள் சரிவர இயங்குகின்றனவா என்பதை சோதனை செய்யும் வகையில் புதுக்கோட்டை புதுக்குளத்தில் இன்று சோதனை, ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.