கரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இத்தொற்றுநோய் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
புதுக்கோட்டையில் இன்று 131 பேருக்கு கரோனா
புதுக்கோட்டை : இன்று (ஆக. 13) புதிதாக 131 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஆக.13) புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 131 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,662ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 47 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 2,477 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 1,138 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.