புதுக்கோட்டை மாவட்டம் ராணியார் அரசு மருத்துவமனையில் 41 பேர் தற்போது கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (54) என்பவர் சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அவரது ரத்த மாதிரியை சோதனைசெய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 16ஆம் தேதியன்று ராஜசேகர் சிகிச்சைக்காக அரசு ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்களாகச் சிகிச்சைப் பெற்றுவந்தார்.