புதுக்கோட்டை மாவட்டம் 41ஆவது வார்டுக்கு உட்பட்ட மறைமலை நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
இதுகுறித்து தகவலறிந்ததும் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரத் துறையினரால் முடக்கப்பட்டது.