புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், ஐந்து மாத கர்ப்பமாக இருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் அவரை கடந்த மாதம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். சிறுமி கற்பமாக இருந்ததால் இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட சிறுமியிடம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பாதிக்கப்பட்ட சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு காவலர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியல் வன்புணர்வு செய்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், இதில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.