தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருதரப்பினரிடையே தொடரும் மோதல்: பொதுமக்கள் புகார்! - pudukottai

புதுக்கோட்டை: இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை

By

Published : Mar 28, 2019, 5:23 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா சின்ன குரும்பன்பட்டி கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “பெரிய குரும்பன்பட்டிகாயாம்பு அய்யனார் கோயிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தபோதுஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள்மற்றொரு தரப்பைச்சேர்ந்தவர்களின்மாடுகளை அடக்கினர்.

இதனால் மாடுகளை அடக்கிய தரப்பினரின்வீடுகளை சூறையாடுதல், சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில்மற்றொரு தரப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

மேலும், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஆண், பெண், குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் தாக்கி ஊருக்குள் பெரிய கலவரத்தை ஏற்படுத்திவிட்டனர்.

இது தொடர்பாக இலுப்பூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தும் அவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவருகின்றனர். அதனால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இருதரப்பினரிடயே ஏற்பட்ட கலவரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை

ABOUT THE AUTHOR

...view details