செய்தியாளர்களை சந்தித்த குழ. சண்முகநாதன் கூறியதாவது, எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அதிமுகவில்தான் இருந்தேன். அம்மா இறந்த பிறகு கட்சியில் இருந்த பலருக்கும் வந்த குழப்பம் எனக்கும் வந்தது. இதையடுத்து அமமுகவில் இணைந்தேன்.
அமமுகவில் சாதிவெறி தாங்க முடியவில்லை - புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் - அமமுக
புதுக்கோட்டை: அமமுக கட்சியில் சாதிவெறி தாங்கமுடியவில்லை எனக் கூறி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த குழ. சண்முகநாதன் அக்கட்சியிருந்து விலகி முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
ஆரம்ப காலத்திலிருந்து கட்சியில் பரபரப்பாக பணியாற்றியதால், கட்சியினர் பலரும் அறிமுகமானர்கள். இதனால் முதலில் ஒன்றியச் செயலாளராகவும், ஆறு மாதத்தில் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டேன். ஆனால் அங்குள்ள சாதிவெறி அரசியல், தொண்டர்களை மிகவும் வெறுப்படைய வைத்து விட்டது. டிடிவிக்குத் தெரியாமல் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் பரணி காரத்திகேயன் பல முடிவுகளை எடுக்கிறார். என்னை வடக்கு மாவட்டச் செயலாளர் என்று ரப்பர் ஸ்டாம்பாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு பல தவறுகளைச் செய்கிறார். இதற்கு உறுதுணையாக இருப்பது அறந்தாங்கி நகரச் செயலாளர் சிவசண்முகம் ஆவார்.
இருவரும் சேர்ந்து கொண்டு மற்ற சமூகத்தினரை இழிவு படுத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலருக்கு பொறுப்புகளை பெயரளவுக்கு போட்டு கொடுத்து விட்டு, மற்ற கட்சிக்காரர்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். இதில் நான் சார்ந்த முத்தரையர்கள் பெருமளவில் இருந்தாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.