தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணவ கொலையில் இருந்து பாதுகாப்பு கோரிய வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு! - மதுரை அண்மைச் செய்திகள்

மதுரை : ஆணவ கொலையில் இருந்து பாதுகாப்பு அளிக்குமாறு கோரிய வழக்கில், மனுதாரரின் தந்தை, உறவினர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆணவ கொலையில் இருந்து பாதுகாப்பு கோரிய வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு!
ஆணவ கொலையில் இருந்து பாதுகாப்பு கோரிய வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு!

By

Published : Apr 21, 2021, 9:36 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் ரம்யா. இவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பாதுகாப்பு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் ,”நான் கடந்த 10ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் எனது வீட்டிலிருந்து, காதலர் சுரேந்தர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். தொடர்ந்து 11ஆம் தேதி காதலர் சுரேந்தர் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எனது தந்தை வீட்டில் இருந்து எந்த ஒரு பொருட்களையும் எடுத்து செல்லவில்லை. எனது கணவர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்.

அதனால் எனது குடும்பத்தினர் எங்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது என்னையும், எனது கணவரையும் ஆணவ கொலை செய்ய எனத குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். கொலை செய்யும் நோக்கத்துடன் வெளியாட்கள் மூலமாக எங்களது நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

எங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனக்கும், எனது கணவருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கிட உத்தரவிட வேண்டும். மேலும் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு சிறப்பு குழு அமைத்து உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், இதுகுறித்து மனுதாரரின் தந்தை, உறவினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க : முன்களப் பணியாளர்களுக்கு காப்பீடு: ஹர்ஷ் வர்த்தனுக்கு நன்றி!

ABOUT THE AUTHOR

...view details