புதுக்கோட்டை கீழ் இரண்டாம் வீதியில் உள்ள கடைகளுக்கான சரக்குகளை இறக்குவதற்கு அப்பகுதியில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பசுவுடன் வந்த கன்றுக்குட்டி திடீரென்று லாரிக்கு அடியில் சென்று சிக்கிக் கொண்டது.
லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கன்றுக்குட்டி: பசுவின் பாசப் போராட்டம் - புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டை: லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கன்றுக்குட்டியைக் காப்பாற்ற முயன்ற பசுவின் பாசப் போராட்டம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கன்றுக் குட்டி
இதனைக் கண்ட பசு லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கன்றுக்குட்டியைக் காப்பாற்ற போராடியது. மேலும் அப்பகுதி பொதுமக்களும் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கன்றுக்குட்டியைக் காப்பாற்றுவதற்காக, கன்றுக்குட்டியின் காலை பிடித்து இழுத்தபோது பசு அவர்களைக் கன்றுக் குட்டியைத் தொடவிடாமல் முட்டி விரட்டியது.
இருப்பினும் பொதுமக்கள் பசுவை விரட்டிவிட்டு, லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கன்றுக்குட்டியை மீட்டு வெளியே விட்டனர்.
Last Updated : May 1, 2021, 12:50 PM IST