புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக அன்னவாசல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறையுடன் இணைந்து அன்னவாசல் காவல்துறையினர் கீழக்குறிச்சி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராயம் விற்ற சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது - liquor sale arrest
புதுக்கோட்டை: கள்ளச்சாராயம் விற்பனை செய்த அண்ணன், தம்பி உள்ளிட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
arrest
அப்போது மேலகருப்பாடி பகுதியில் சாராயம் விற்கப்படுவதையறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேலகருப்பாடிபட்டியைச் சேர்ந்த சங்கர் (46), வேங்கைகுறிச்சியைச் சேர்ந்த சகோதரர்களான பெரியஉசேன் (எ) பழனிச்சாமி, சின்னஉசேன் (எ) பிரபு (28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஐந்து லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.