புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுத்தெருவைச் சேர்ந்த சாகுல் அமீது(40) என்பவர், அதே பகுதியில் சமோசா கடை நடத்தி வந்தார். இவரது மகன் முகமதுசாலிக்(9) 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் சித்தன்னவாசல் அருகே உள்ள பணங்குடி மலையடிக்கு நேற்று (ஜூலை 9) மாலை குளிக்கச் சென்றனர்.
மலையடி பள்ளத்தில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு! - father and son death in pudukottai
புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே உள்ள மலையடி பள்ளத்தில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துணிமணிகளை கரையில் வைத்துவிட்டு மலையடி பள்ளத்தில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கினர். வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், பணங்குடி மலையடிக்கு சென்று பார்த்தபோது கரையில் துணி, வாலி, செருப்பு உள்ளிட்ட பொருள்கள் மட்டுமே இருந்தன. பின்னர், இருவரில் ஒருவரது உடல் மட்டும் தண்ணீரில் மிதக்க தொடங்கியது. இதையடுத்து, அன்னவாசல் காவல்துறைக்கு உறவினர்கள் தகவல் அளித்தனர்.
இதனிடையே, அன்னவாசல் பகுதியில் நேற்று இரவு மழை பெய்ததால் தந்தை, மகன் உடல்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் இன்று காலையில் மகனின் உடல் மீட்கப்பட்டது. மலையடி பள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததால், உடனடியாக கம்பி வேளி அமைத்து இதை மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.