தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையிலும் பேனா சிலை வைக்கத் திட்டம்.. கடும் எதிர்ப்புத் தெரிவித்த பாஜக! - Pen statue project

புதுக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரி எதிரே நகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பூங்காவில், பேனா சிலை நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதை அறிந்த பாஜகவினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 20, 2023, 3:56 PM IST

பூங்காவில் பேனா சிலை வைப்பதை எதிர்த்து பாஜக ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அருகே கடலுக்குள் ரூ.81 கோடியில், 134 அடி உயரத்தில் பேனா சிலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. அப்போது, சீமான் உள்பட பலரும் கடல் வளம், சுற்றுச்சூழல் பாதிக்கும், அதனால் கடலுக்குள் பேனா சிலை வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் பிறகு தொடர்ந்து பொதுமக்களிடம் பேனா நினைவுச் சின்னம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகரில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி எதிரில் உள்ள 5 ஏக்கர் காலி இடத்தில், பூங்கா அமைக்க கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிப்பு வெளியாகி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுமார் ரூ. 9 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர்கள் பெரியவர்களுக்கான பூங்கா, உடற்பயிற்சிக் கூடம், கணிதம், அறிவியல் உபகரணங்கள், காய்கறி, பழங்கள், இசை நீர் ஊற்று, கான்கிரீட் மரங்கள், விலங்குகள், பறவைகள் என நூற்றுக்கணக்கான அம்சங்களுடன் பூங்கா தயாராகி வருகிறது.

விரைவில் பூங்கா திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில், அதிநவீன பூங்காவில் 15 அடி உயரத்தில் கான்கிரீட் பேனா சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனையடுத்து பூங்கா சிலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை அகற்றக் கோரியும் புதுக்கோட்டை பாஜக மேற்கு மாவட்டம் சார்பில், தலைவர் விஜயகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து, பூங்கா நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

இதனையடுத்து நகர காவல் துறை கண்காணிப்பாளர் ராகவி தலைமையிலான காவல் துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர், பேனா சிலையை அகற்றக்கோரியும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், பாஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம் உள்ளிட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதையும் படிங்க:‘10,000 அடி உயரத்துக்கு கூட பேனா வைத்துக் கொள்ளட்டும்’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details