தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக சர்ச்சையை ஏற்படுத்துகிறது- ப.சிதம்பரம் - people grama shaba

புதுக்கோட்டை: அதிமுக - பாஜக கூட்டணி என என்று முடிவானதோ அன்றே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

By

Published : Jan 3, 2021, 4:48 PM IST

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "அதிமுக - பாஜக கூட்டணி என என்று முடிவானதோ அன்றே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை சந்திப்பது இயல்பு. அதே போன்றுதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகிறார்.

திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுகவினர் சர்ச்சையை உருவாக்குகின்றனர். விவசாயிகள் போராட்டம் இன்று 39 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தில் இதுவரை 40 விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு தனது பிடிவாதத்தை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை.

பணமதிப்பிழப்பு சீன ஊடுருவல் தொடங்கி விவசாயிகள் போராட்டம்வரை மத்திய அரசு தனது பிடிவாதத்தை மாற்றிக்கொள்ளவில்லை. குடிமக்கள் சொன்னபடிதான் குடி ஆட்சி நடக்க வேண்டும். இந்த அரசுக்கு குடிமக்கள் கூறுவதும், நாடாளுமன்றமும், நாடாளுமன்ற விவாதமும் பெரிய பொருட்டில்லை. முரட்டுத்தனமான இயந்திரமாக பாஜக அரசு செயல்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி என்று ஏற்பட்டதோ அன்றைக்கே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியானதாக கூறினேன் அதேபோன்றுதான் தற்போதும். 2021 தேர்தலிலும் வெற்றி தொடரும்" என்றார்.

முதலமைச்சர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்கும் என்று அக்கட்சி கூறிவருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், "அவ்வப்போது பாஜகவினர் சிரிப்பு வெடிகுண்டுகளை வீசிவருகின்றனர். அதில் இதுவும் ஒன்று. நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளலாம்.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு

ரஜினிகாந்த் எனது நீண்ட நாள் நண்பர் அவருடைய முடிவை நான் வரவேற்கிறேன் "என்றார்.

இதையும் படிங்க:கேரளாவின் இளம் கிராம பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றார் ரேஷ்மா!

ABOUT THE AUTHOR

...view details