புதுக்கோட்டை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்’’ அதிமுக தலைமை சரியில்லாத காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி நடந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளும் தோல்வியடைந்தால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் பொறுப்பு.
அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து விராலிமலை முருகன் சன்னதியில் தொடங்கி மணமேல்குடி கோடியக்கரை வரை பொதுமக்களிடம் கிராமம் கிராமமாக சென்று நீதி கேட்டு பயணம் மேற்கொள்வேன். அதுமட்டுமல்லாமல், இரண்டு நாள்களில் வேட்பாளர்களை மாற்றவில்லை என்றால், ஓரிரு நாளில் என்னுடைய முடிவை அறிவிப்பேன்” என்றார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இரத்தினசபாபதி பேட்டி - politicals news
''ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக சர்வாதிகாரர்களை போல் வேட்பாளர்கள் தேர்வில் திணிப்பு ஏற்படுத்துவதை கட்சியும் ஏற்றுக்கொள்ளாது மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என அறந்தாங்கி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் பேட்டி.
இதையும் படிங்க: கருணாநிதி பெயரில் பெரிய நூலகம்! - மு.க.ஸ்டாலின் உறுதி!