தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் தயார்! - மு.க.ஸ்டாலின் - ஸ்டாலின்

புதுக்கோட்டை: அதிமுக அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் தயாராகவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin

By

Published : Feb 15, 2021, 3:20 PM IST

திருமயத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, வெள்ளியாலான 5 அடி உயர கதாயாயுதத்தை சட்டப்பேரவை உறுப்பினர் ரகுபதி வழங்கினார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “இந்தியாவிலேயே, அனைவருக்கும் தரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கியது கலைஞர் அரசு தான்.

தற்போதைய அதிமுக அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் தயாராகவுள்ளது. விரைவில் அதனை ஆளுநரிடம் கொடுக்கவுள்ளோம். ஆளுநர் அதில் நடவடிக்கை எடுக்க மாட்டார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வது உறுதி.

அதிமுக அரசின் இரண்டாவது ஊழல் பட்டியல் தயார்! - மு.க.ஸ்டாலின்

மற்ற அமைச்சர்களை விட பவர்ஃபுல் அமைச்சராக இருப்பவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில், ஊழல் செய்ததற்கான ஆதாரம் வருமான வரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கரோனா காலத்திலும் ஊழல் செய்தவர் விஜயபாஸ்கர்தான். இந்த அரசால் 10 ஆண்டு காலமாக தமிழகம் பாழாகிவிட்டது” என்றார்.

இதையும் படிங்க:'அதிகரிக்கும் எரிவாயு விலை... மானியத்தை உயர்த்துக'

ABOUT THE AUTHOR

...view details