புதுக்கோட்டையில் அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது. இந்த விவகாரத்தில் எந்த குளறுபடியும் இல்லை.
ஓபிசி இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டை பெற்றே தீரும். ஐரோப்பிய நாடுகளில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மிகக் குறைவான அளவே பாதிப்பு உள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.