தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட சேர்மனுக்கு பேசுவதற்கு வகுப்பெடுத்த தொண்டர்கள் - வைரல் வீடியோ - அதிமுக ஊராட்சி தலைவர் வைரல் வீடியோ

புதுக்கோட்டை: மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக வெற்றிபெற்ற அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி, செய்தியாளர்களிடம் பேச முடியாமல் தவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

By

Published : Jan 11, 2020, 6:27 PM IST

Updated : Jan 11, 2020, 10:16 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், ஒன்பது இடங்களில் அதிமுகவும், நான்கு இடங்களில் திமுகவும் வெற்றிபெற்றன. அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின், புதுக்கோட்டை மாவட்ட ஒன்றிய அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஜெயலட்சுமி, செய்தியாளர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் மிகவும் திணறினார். உடனடியாக, அவர் அருகிலிருந்த கட்சி தொண்டர்கள், ’இப்படி பேசுங்கள்’, ’இதை பேசுங்கள்’ என அனைத்தையும் பொது இடத்தில் வைத்து வகுப்பெடுத்தனர்.

மாவட்ட ஊராட்சித் தலைவருக்குப் பேச வகுப்பெடுத்த தொண்டர்கள்

இதனால், பொதுவெளியில் பேச முடியாதவர் தலைவர் பதவிக்கு வந்து என்ன செய்யப்போகிறார் என்பது மக்களிடையே பேசுபொருளானது. மேலும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தாமதமாக வந்த தேர்தல் அலுவலர் - தள்ளிப்போன மறைமுகத் தேர்தல்!

Last Updated : Jan 11, 2020, 10:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details