புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுகிறார். இதற்கிடையில் மச்சுவாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்த சதாசிவம், பழனி ஆகியோர் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்தனர்.
பணப்பட்டுவாடா - கையும் களவுமாகச் சிக்கிய அதிமுகவினர்! - கையும் களவுமாகச் சிக்கிய அதிமுகவினர்
புதுக்கோட்டை: மச்சுவாடி அருகில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அதிமுகவினர் இரண்டு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கையும் களவுமாகச் சிக்கிய அதிமுகவினர்
அப்போது அப்பகுதியில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மச்சுவாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கணேஷ் நகர் காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.