புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ராக்கெட் ஒன்று கரோனா வைரஸை அழிப்பதுபோல் காட்சிப்படுத்தி, ஓவியர்கள் வரைந்துள்ள கரோனா விழிப்புணர்வு ஓவியம் காண்போரைக் கவர்ந்துள்ளது. இதற்கு ஊராட்சி நிர்வாகத்தினரும் பக்கபலமாக இருந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொத்தமங்கலம் கடை வீதியில், மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியமானது ஊராட்சி நிர்வாகம், ஓவியர் சங்கத்தினரால் வரையப்பட்டுள்ளது.
மேலும் அந்த ஓவியத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் படம் வரையப்பட்டதோடு ராக்கெட் ஒன்று, கரோனா வைரஸை அழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று காண்போரைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.