புதுக்கோட்டை: திருக்கோகர்ணம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிஷோர் குமார்(25). இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகில் நடந்த சாலை விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் அவருக்கு தலை உள்பட உடலின் பல்வேறு பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அதன்பின் மருத்துவர்கள் கிஷோர் குமாரின் குடும்பத்தினரிடமும் உடல் உறுப்புகள் தானம் குறித்து எடுத்துரைத்தனர்.