உலகத்தையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்குகிறது.
கரேனா தொற்று இந்தியாவில் வேகமாக முன்னெடுத்துவரும் நிலையில், தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறுகட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதனால், இந்தியாவில் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் யாரும் வீடுகளிலிருந்து வெளியே வராமல் முடங்கிப்போய் வாழ்ந்துவருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, வீடுகளிலேயே இருங்கள், வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று, வீடுகளுக்கு வரும்பொழுது கிருமி நாசினி மருந்து கொண்டு கையைக் கழுவி சுத்தமாக இருங்கள் எனப் பொதுமக்களுக்கு அறுவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று அபாயத்தால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பழமைக்குத் திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்று வராமல் இருப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், வேப்பிலை, ஆவாரம் பூ ஆகியவற்றைத் தோரணமாகக் கட்டி மஞ்சள்,மாட்டுச்சாணம் ஆகியவற்றை வீட்டு வாசல்களில் கரைத்து தெளித்துவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தான் வளர்க்கும் மாடுகள் இடும் சாணம், கோமியம் ஆகியவற்றை அனைவருக்கும் கொடுத்தும் வீடு முழுவதும் தெளித்தும் கரோனாவிலிருந்து தப்பிக்க விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
மக்களுக்கு கோமியம் வழங்கும் விவசாயி கிருமிகள் உள்ளே வராமல் இருப்பதற்காகப் பழங்காலத்துக்கே திரும்பினாலும், தற்போதைய சூழலில் காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலாக உள்ளது.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்யும் திமுக எம்பி -கே.பி. அன்பழகன் குற்றச்சாட்டு