தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம்-ஐ கல்லால் உடைத்து திருட முயன்ற நபர் கைது - theif arrested

புதுக்கோட்டை : அறந்தாங்கி அருகே ஏடிஎம்-ஐ கல்லால் உடைத்து பணத்தை திருட முயன்ற நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

பணத்தை திருட முயன்ற நபர்
பணத்தை திருட முயன்ற நபர்

By

Published : Dec 2, 2020, 4:11 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையிலுள்ள ஐடிபிஐ (IDBI) வங்கியின் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்லால் உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு, தலைமை காவலர் தங்கராணி மற்றும் காவலர் ராம்குமார் ஆகியோர் ஏடிஎம் இயந்திரம் இருந்த பகுதியிலிருந்து சத்தம் வருவதை அறிந்து வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கு சென்று பார்க்கையில், அந்நபர் கல்லால் ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்நபரை கைது செய்து விசாரித்தபோது, அவர் மாணிக்க குடியிருப்பைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிவக்குமார் வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் பாதுகாவலர் இல்லாததே இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:சொத்துத்தகராறு - கிணற்றில் வீசி குழந்தை படுகொலை!

ABOUT THE AUTHOR

...view details