தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல ரவுடி சுரேஷ் கொலை வழக்கில் 6 பேர் கைது! - 6 arrested

புதுக்கோட்டை: திருவப்பூர் கோயில் அருகே சுரேஷ் என்ற ரவுடியை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல ரவுடி சுரேஷ் கொலை வழக்கில் 6 பேர் கைது!

By

Published : Jun 8, 2019, 11:43 PM IST

புதுக்கோட்டை அடுத்த கோவில்பட்டியைச் சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவர் நேற்று திருவப்பூர் பகுதியில் நடைபயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது முத்து மாரியம்மன் கோயில் அருகே உள்ள கடை வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திவீர விசாரணை செய்து வந்த காவல்துறையினர், கொலைக்கு காரணமானவர்களான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மதி, யோகேஸ்வரன், சன்னாசி, மணிகண்டன், மணிபாரதி, பழனிச்சாமி ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details